இந்தியா

நாட்டின் பெருமைக்குரிய விவகாரத்தில் இப்படி செய்யலாமா?: எதிர்க்கட்சிகள் மீது ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

Published On 2025-08-18 17:38 IST   |   Update On 2025-08-18 17:39:00 IST
  • ஷிபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் குறித்து விவாதம் நடைபெற்றது.
  • எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் விண்வெளி வீரர் ஷிபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் குறித்து இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி பீகார் மாநில SIR விவகாரம் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலையில், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாட்டின் பெருமைய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கட்சி அரசியலை தாண்டி இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தி, அவை நடைபெறாமல் தடுங்கல் ஏற்படுத்தியது மிகவும் துரதிருஷ்டவசமானது. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் விக்ஷித் பாரத் விண்வெளி திட்டத்திற்கு முக்கியமான, இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது தொடர்பாக விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கட்சி அரசியலை தாண்டி குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News