இந்தியா

சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்திய இந்தியா கூட்டணி: சந்திரபாபு நாயுடு மகன் சொல்வது என்ன?

Published On 2025-08-19 20:54 IST   |   Update On 2025-08-19 20:54:00 IST
  • இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • சுதர்சன் ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமராவதி:

துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்தியா கூட்டணியின் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுதர்சன் ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும் இவரை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி உருவாகும்.

இதேபோல், ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கும் பொருந்தும். இது இந்தியா கூட்டணி சார்பாக பா.ஜ.க.வுக்கு விடுத்துள்ள சவாலாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்தவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக இந்தியா கூட்டணி நிறுத்தியுள்ளது தொடர்பாக, சந்திரபாபு நாயுடு மகன் நர லோகேஷ் கூறுகையில், எங்களிடம் தெளிவின்மை இல்லை. அரவணைப்பு, மரியாதை மற்றும் உறுதி மட்டுமே. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒற்றுமையாக உள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News