இந்தியா

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து

Published On 2025-07-29 07:27 IST   |   Update On 2025-07-29 10:36:00 IST
  • நிமிஷா பிரியாவிற்கு 2018ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
  • 2023ஆம் ஆண்டு ஏமன் உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்த அவர், அதே நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரின் கொலை வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

புதிதாக ஆஸ்பத்திரி தொடங்க திட்டமிட்டு செயல்பட்டு வந்தநிலையில், அவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலை வழக்கை விசாரித்த ஏமன் நாட்டு நீதிமன்றம், நர்சு நிமிஷா பிரியா கொலை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

அவரது மரண தண்ட னையை ஏமன் உச்ச நீதித்துறை கவுன்சில் 2023-ம் ஆண்டு உறுதி செய்தது. நிமிஷா பிரியாவை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். மேலும் மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

இந்தநிலையில் நர்சு நிமிஷா பிரியாவுக்கு கடந்த 16-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. நர்சு நிமிஷா பிரியாவை தூக்கு தண்டனையில்இருந்து காப்பாற்றும் நடவடிக்கை களில் அவரது குடும்பத்தினர் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டது.

இரு தரப்பும் ஏற்கத்தக்க தீர்வை எட்டுவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. இந்தநிலையில் நிமிஷா பிரியாவிற்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் நர்சுக்கான மரண தண்டனையை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. முக்கியமாக கொலை செய்யப்பட்ட ஏமன் நாட்டு குடிமகன் தலால் குடும்பத்தினரை சமாதானம் செய்யும் நடவடிக்கையில் நர்சு குடும்பத்தினர் தொடர்ந்து ஈடுபட்டனர்.

அதில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டி ருக்கிறது. நர்சு நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற விரும்பவில்லை என்ற முடிவை, கொலை செய்யப் பட்ட தலாலின் குடும்பத்தினர் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நர்சின் மரண தண்டனையை ரத்து செய்ய கொள்கை அளவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள தாக "சேவ் நிமிஷா பிரியா" கவுன்சிலின் சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வக்கீலுமான சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மேலும் விவாதங்கள் நடத்தப்படவேண்டும் எனவும், கருணை உள்ளிடட விவாதங்கள் தொடரும் என்றும் அவர் கூறி யிருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:-

நர்சுக்கான மரண தண்டனைக்கான கோரிக்கையை வாபஸ் பெற தலாலின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர். தலாலின் பெற்றோர் உயிருடன் உள்ளனர். மேலும் அவரது குழந்தைகளும் இருக்கின்றனர். ஏமன் சட்டப்படி இறந்தவரின் சொத்தின் வாரிசுகள் தான் முடிவு எடுக்க வேண்டும்.அதன்படி இறந்தவரின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் தான் முடிவெடுக்க வேண்டும்.

அவர்கள் இல்லையென்றால் தான் உடன் பிறந்த சகோதரர் முடிவெடுக்க முடியும். நாங்கள் எங்களின் சொந்தவழியில் விவாதங்களை நடத்து கிறோம். மத்திய அரசு இந்த விவாதங்களில் எதிலும் பங்கேற்கவில்லை. இரண்டு வாரங்களாக நாங்கள் தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Tags:    

Similar News