இந்தியா

நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

Published On 2024-03-12 04:51 GMT   |   Update On 2024-03-12 09:04 GMT
  • பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
  • பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி:

கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருட்கள் கடத்தல், சதி செயலில் ஈடுபடுதல் என பல்வேறு குற்றச்செயல்களை அவர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த பயங்கரவாத அமைப்புடன் இந்தியாவில் உள்ள சில மாபியா கும்பல்கள் தொடர்பில் உள்ளனர். பயங்கரவாதிகளுக்கு தேவையான உதவிகளை அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பிரபல ரவுடிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் சண்டிகரில் உள்ள 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.

Tags:    

Similar News