இந்தியா

ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசல்: விசாரணை அறிக்கை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிப்போம்: சித்தராமையா

Published On 2025-07-18 17:46 IST   |   Update On 2025-07-18 17:46:00 IST
  • ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
  • இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிஷன் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஐ.பி.எல். 2025 சீசனில் ஆர்சிபி அணி பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருடத்திற்குப் பிறகு கோப்பையை வென்றதால் வெற்றி கொண்டாட்ட விழா நடத்தப்பட்டது. கடந்த மாதம் 4ஆம் தேதி வெற்றி கொண்டாட விழாவில் கலந்து கொள்ள லட்சகணக்கான ரசிகர்கள் பெங்களூரு சின்னசாமி மைதானம் முன் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

கூட்டல் நெரிசல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் இரண்டு பகுதிகளான அறிக்கையை கடந்த 11ஆம் தேதி தாக்கல் செய்தது. இந்த அறிக்கை நேற்று நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் சுருக்கம் அனைத்து அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அறிக்கை குறித்து இதுவரை அமைச்சரவையில் விவாதிக்கப்டவில்லை. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதிப்போம். மீடியாக்கள் குறிப்பிட்ட சில விசயங்களை பதிவு செய்துள்ளன. அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் அது குறித்து பேசுவேன்.

சிறப்பு விசாரணைக் குழு தேவை என்றால், அது அமைக்கப்படும். அது காவல்துறையின் அறிக்கையை சார்ந்தது. தனிநபர் (சுமார் 100 உடல்களை புதைக்கப்பட்டதை பார்த்ததாக கூறும் முன்னாள் தூய்மை பணியாளர்) 10 வருடங்களாக தலைமறைவாக இருந்த அவர், இப்போது காவல்துறை முன் வாக்குமூலம் அளித்து, தனக்கு வேண்டியதை சொல்லிவிட்டார்.

இறந்த உடல்களை அடக்கம் செய்ததில் தானும் ஒருவர் என்றும், அவை புதைக்கப்பட்ட இடத்தைக் காண்பிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஓரிரு நாட்களில் போலீசார் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம் என கார்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News