இந்தியா

அரியானா மாநில முதல்வராக நயாப் சைனி பதவியேற்றார்

Published On 2024-03-12 09:16 GMT   |   Update On 2024-03-12 12:33 GMT
  • பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
  • கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

அரியானா மாநிலத்தில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். கட்டார் ஆட்சிக்கு ஜனநாயக ஜனதா கட்சி என்ற மாநில கட்சி ஆதரவு அளித்து வந்தது.

இரு கட்சிகளும் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. ஜேஜேபி கட்சி தலைவரும், அரியானா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த துஷ்யந்த் சவுதாலா டெல்லியில் ஜே.பி. நட்டா உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் பா.ஜனதா- ஜேஜேபி இடையிலான கூட்டணி முறிவடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இருந்த போதிலும் சில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் எனத் தகவல் வெளியானது. இந்த நிலையில் கட்டார் தனது முதல் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

இந்நிலையில், அரியானா மாநில பாஜக தலைவராகவும், குருக்ஷேத்ரா தொகுதி எம்.பி ஆகவும் இருக்கும் நயாப் சைனி ஹரியானா முதல்வராக பதவியேற்றார்

இன்று மாலை 5 மணியளவில் நயப் சிங் சைனிக்கு ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ள மனோகர் லால் கட்டார், மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News