இந்தியா

பெண்ணை காப்பாற்ற கடலில் குதித்த போலீசார்- வீடியோ

Published On 2024-06-29 10:14 IST   |   Update On 2024-06-29 10:14:00 IST
  • கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
  • போலீசார் தங்களை பற்றி கவலைப்படாமல் கடலில் குதித்து, நீரில் மூழ்கிய ஸ்வாதியை மீட்டனர்.

மும்பையில் கடலில் மூழ்கிய பெண்ணை காப்பாற்றுவதற்காக 2 போலீஸ்காரர்கள் கடலில் குதித்து அந்த பெண்ணை மீட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மும்பை மரைன் டிரைவ் கடற்கரை பகுதியில் ஸ்வாதி என்ற பெண் நடந்து சென்ற போது அவரது கைப்பை கடலில் தவறி விழுந்துள்ளது. அதனை எடுக்க முயன்ற போது அவர் தண்ணீருக்குள் மூழ்கினார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸ்காரர்களான கிரண் தாக்கரே, அன்மோல் தஹிபேல் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

அப்போது கடலில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. எனினும் போலீசார் தங்களை பற்றி கவலைப்படாமல் கடலில் குதித்து, நீரில் மூழ்கிய ஸ்வாதியை மீட்டனர். பின்னர் ஸ்வாதியை மேல் சிகிச்சைக்காக மொபைல் வேன் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்வாதியை போலீசார் மீட்ட காட்சிகளை மும்பை போலீசார் தங்களது வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ 7.5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 43 ஆயிரத்திற்கும் மேலான லைக்குகளையும் பெற்றுள்ளது. பயனர்கள் பலரும் மும்பை போலீசாரை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.


Tags:    

Similar News