இந்தியா
null

முஸ்லிம் இளைஞர்கள் பஞ்சர் ஒட்டிப் பிழைக்கிறார்கள்.. மோடி சர்ச்சை பேச்சு - ஒவைசி பதிலடி

Published On 2025-04-15 15:52 IST   |   Update On 2025-04-15 15:58:00 IST
  • முஸ்லிம் இளைஞர்கள் இன்று சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் போட்டு வாழ்வதற்கு தேவை இருந்திருக்காது
  • பாஜகவில் ஏன் யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றினர்.

பிரதமர் நரேந்திர மோடி அரியானாவில் நேற்று பேசும் போது வக்பு திருத்த சட்டம் தொடங்க காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். முஸ்லிம்கள் மீது உண்மையான அனுதாபம் இருந்தால் அவர்களுக்கு 50 சதவீத தேர்தலில் போடடியிட டிக்கெட் வழங்குங்கள் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் "வக்பு சொத்துகளை நேர்மையாக பயன்படுத்தி இருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் இன்று சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் போட்டு வாழ்வதற்கு தேவை இருந்திருக்காது" என்ற பிரதமர் மோடியின் பேசியிருந்தார்.

பாஜகவில் ஏன் யாருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்வினை ஆற்றினர்.

அந்த வகையில் முஸ்லிம் இளைஞர்கள் குறித்த மோடியின் கருத்துக்கு அகில இந்தய மஜ்லீஸ் தலைவர் (AIMIM) ஓவைசி கூறும் போது, "ஆர்.எஸ்.எஸ். தனது சித்தாந்தத்தையும், வளங்களையும் நாட்டின் நலனுக்காக பயன்படுத்தி இருந்தால் பிரதமர் தனது குழந்தைப் பருவத்தில் தேநீர் விற்க வேண்டிய அவசியமில்லை. மோடியின் வக்பு திருத்த சட்டம் அவற்றை மேலும் பலவீனப்படுத்தும்" என்றார்.  

Tags:    

Similar News