இந்தியா

மோடி அரசின் "தவறான நிர்வாகம்" பொருளாதார மாற்றத்தை 20 ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியுள்ளது: காங்கிரஸ்

Published On 2024-02-24 06:25 GMT   |   Update On 2024-02-24 06:25 GMT
  • உலக பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது- மத்திய அரசு.
  • மன்மோசன் சிங் ஆட்சி கால பொருளாதர சூழ்நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல்.

பொருளாதார வளர்ச்சி என்பது விவசாயத்திலிருந்து தொழில் நிறுவனங்கள், சேவைகள் வரை வேலைவாய்ப்பைப் பன்முகப்படுத்துவதாகும். இதைத்தான் உலக நாடுகள் செய்து வருகிறது. இதுவரை நாமும் பின்பற்றி வருகிறோம் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அடைந்த முன்னேற்றம், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பின்னோக்கி செல்கிறது. தற்போதைய ஆட்சியின் "தவறான நிர்வாகம்" பொருளாதார மாற்றத்தை 20 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியுள்ளது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

விவசாயப் பணிகளில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 2004-05-ம் ஆண்டை காட்டிலும், 2017-2018-ம் ஆண்டில் 6.7 கோடியாக சரிந்துள்ளது. விவசாயத்துறையில் உள்ள சம்பளத்தை விட உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில் கவர்ச்சிகரமான சம்பளம் கிடைப்பதால் அந்தத் துறைகளை பணியாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இந்தியாவின் மாற்றத்தில் இதுதான் மோடி அரசின் மிகப்பெரிய வரலாற்று சாதனை என ஜெய்ராம் ரமேஷ் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உலக பொருளாதாரத்தில் இந்தியா சவால் விடும் நாடாக மாறி வருகிறது. தற்போது உலக பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3-வது இடத்திற்கு கொண்டு வருவதுதான் எங்களது இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கை குறித்து மோடி அரசு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News