null
டிரம்ப்பின் ஆதரவாளரான மோடியால் பாஜகவிற்கு ஆபத்து - பகீர் கிளப்பிய சுப்ரமணிய சுவாமி
- சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
- என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே மோடி விரும்புகிறார் என்று டிரம்ப் தெரிவித்தார்.
ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை மேலும் அதிகரிப் போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்தார்.
அப்போது பேசிய டிரம்ப், "பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும், இந்தியா என்னை மகிழ்ச்சியடைய செய்வது முக்கியம்" தெரிவித்தார்.
இந்நிலையில் டிரம்பின் ஆதரவாளரான பிரதமர் மோடி ஓய்வு பெறவேண்டும் என்று சுப்ரமணிய சுவாமி மீண்டும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மோடியை ஓய்வுபெறச் செய்து, மார்க் தர்ஷன் மண்டலில் வசிக்கச் சொல்ல வேண்டுமா என்பதை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். டிரம்ப்பின் ஆதரவாளராக இருக்கும் மோடியால் இந்திய ஜனநாயகம் மற்றும் பாஜகவிற்கு ஆபத்து ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பியுமான சுப்ரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் கட்சி வழிநடத்தப்படுவதை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.