இந்தியா

பாஜகவுக்கு 400 சீட்டு.. மனநலம் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி - வைரல் வீடியோ

Published On 2024-05-27 19:58 IST   |   Update On 2024-05-27 19:58:00 IST
  • பா.ஜ.க. நிச்சயம் 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி.
  • மருத்துவர் முன்னிலையில் அவர் "எஸ் பார் 400 பர்" என்று தொடர்ச்சியாக கூறினார்.

பாராளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட 500 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பா.ஜ.க.வினர் தேர்தல் அறிவிப்புக்கு முன்பிருந்தே கூற ஆரம்பித்துவிட்டனர்.

பிரதமர் மோடி தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரங்களில் பா.ஜ.க. நிச்சயம் 400-க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்து இருந்தார். மேலும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களும் இதே கருத்தை தேர்தல் பரப்புரைகளில் முன்வைத்தனர்.

இந்த நிலையில், வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 400-க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை உணர்த்தும் பா.ஜ.க. முழக்கம் "எஸ் பார் 400 பர்" என்பதை தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறார். இவரை கட்டுப்படுத்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முயன்றனர்.

எனினும், அவர் தொடர்ச்சியாக முழக்கத்தை நிறுத்தாமல் கூறியதால் அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனை அழைத்து சென்றனர். மருத்துவமனையிலும், மருத்துவர் முன்னிலையில் அவர் "எஸ் பார் 400 பர்" என்று தொடர்ச்சியாக கூறினார்.

மருத்துவர் முன்னிலையிலும் தொடர்ச்சியாக சொன்னதையே சொன்னதால் அவருக்கு என்ன சிகிச்சை அளிப்பது என்று மருத்துவரும் குழம்பினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Tags:    

Similar News