இந்தியா
பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் மம்தா பானர்ஜி- புதிய தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
- பல்கலைக்கழக வேந்தர் பதவியை முதல்வருக்கு வழங்க வகை செய்யும் மசோதா உருவாக்கப்படுகிறது.
- தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஜெகதீப் தங்கார் பதவி வகித்து வருகிறார். இந்த பதவியை அவரிடம் இருந்து முதல்வருக்கு மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து முதல்வரை பல்கலைக்கழங்களின் வேந்தர் ஆக்க வகை செய்யும் சட்ட மசோதா உருவாக்கப்பட்டு விரைவில் சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.