மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு வாக்களித்தார்.
#WATCH | Comedian & Actor Yogi Babu casts his vote at a polling booth in Chennai, Tamil Nadu#LokSabhaElections2024 pic.twitter.com/h0Vbi7BKUZ
— ANI (@ANI) April 19, 2024
சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் நடிகர் சித்தார்த் வாக்களித்தார்.
விழுப்புரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் 102 வயது மூதாட்டி ஜெய்துன்பீ தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகிட் வாக்களித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் இயக்குநர் ஹரி தனது மனைவி பிரீத்தாவுடன் வந்து வாக்களித்தார்.
வாக்களிக்க வந்த 2 பேர் பலி.
மக்களவை தேர்தல் - காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 23.72% வாக்குகள் பதிவாகியுள்ளன
சிவகங்கை மாவட்டம் சிதூரணி. கல்லூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு. 2 கிராமங்களை சேர்ந்த சுமார் 1000 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.
பெரம்பலூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஆ. ராசா வாக்களித்தார்.
திருச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த நளினி என்ற பெண் முதல் முறையாக வாக்களித்தார்.