மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு
சென்னை வேளச்சேரி செக்போஸ்ட் அட்வெண்ட் கிறிஸ்துவ நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஆளுநர் ஆர்.என். ரவி தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
மதுரை மீனாட்சி கலை அறிவியல் கல்லூரியில் செல்லூர் ராஜூ வாக்களித்தார்.
மணிமங்கலத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாக்களித்தார்.
தருமபுரி மாவட்டம் ஜோதிஹள்ளி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.
சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் சுந்தர் சி மற்றும் குஷ்பு தனது மகள்களுடன் வந்து வாக்களித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று உலகின் மிக குறைந்த பெண் ஜோதி ஆம்கே தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
#WATCH | Maharashtra: World's smallest living woman, Jyoti Amge cast her vote at a polling booth in Nagpur today. #LokSabhaElections2024 pic.twitter.com/AIFDXnvuvk
— ANI (@ANI) April 19, 2024
சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தர் வாக்களித்தார்.
சென்னை அடையாறு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வாக்களித்தார்.
சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் வரலஷ்மி தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை புனித சேவியர் பள்ளியில் நடிகை த்ரிஷா வாக்களித்தார்.