என் மலர்
இந்தியா
மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 5 மணி நிலவரப்படி 59.7 சதவீத வாக்குகள் பதிவு
- வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் இன்று (19-ம் தேதி) தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது.
அதன்படி நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.
அதன்படி, வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், பொது மக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Live Updates
- 19 April 2024 5:39 PM IST
தமிழ்நாடு முழுவதும் மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
- 19 April 2024 5:32 PM IST
ராணிப்பேட்டை மாந்தங்கல் வாக்குச்சாவடியில் இறந்தவரின் பெயரில் ஓட்டு பதிவானது குறித்து பாமக புகார்
- 19 April 2024 5:21 PM IST
சேலம் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
- 19 April 2024 5:15 PM IST
நாகப்பட்டினம் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 65.06 சதவீதம் வாக்குகள் பதிவு
- 19 April 2024 4:57 PM IST
கோவையில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை: அண்ணாமலை












