முஸ்லிம்களை வாக்கு வங்கியாகக் கருதும் காங்கிரஸ்: கிரண் ரிஜிஜு தாக்கு
- வக்பு திருத்த சட்டத்தை அசாதுதின் ஒவைசி போன்றோர் நிர்பந்தத்தின் பேரில் எதிர்க்கின்றனர்.
- காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகக் கருதுகின்றன.
புதுடெல்லி:
மத்திய சிறுபான்மையினர் விவகாரத் துறை மந்திரி கிரண் ரிஜிஜு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
வக்பு திருத்த சட்டத்தில் உள்ள 3 முக்கிய பிரச்சனைகள் பற்றிய இடைக்கால உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது. அதனால் அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.ஆனால், சட்டம் இயற்றுவது பாராளுமன்றத்தின் வேலை. அதன் செல்லும் தன்மையை சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் பணி. நாங்கள் செய்தது எல்லாம் சட்டப்படியானது. எனவே, பாராளுமன்றத்தின் அதிகாரம் பறிக்கப்படாது என நம்புகிறேன்.
வக்பு திருத்த சட்டத்தை அசாதுதின் ஒவைசி போன்றோர் நிர்பந்தத்தின் பேரில் எதிர்க்கின்றனர். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகக் கருதுகின்றன.
அவர்கள் படித்து முன்னேறினால், தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றன. எனவே, முஸ்லிம்கள் எப்போதும் ஏழைகளாக இருப்பதையே விரும்புகின்றன என தெரிவித்தார்.