இந்தியா

சபரிமலையில் மலையாள பிராமணர்கள் மட்டுமே மேல்சாந்தி: உயர் நீதிமன்றம்

Published On 2024-03-01 08:29 GMT   |   Update On 2024-03-01 09:04 GMT
  • சபரிமலை தலைமை பூசாரிக்கு மலையாள பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • திருவாங்கூர் தேவசம் போர்டின் இந்த அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

திருவாங்கூர் தேவசம் போர்டு கடந்த 2021-ம் ஆண்டு சபரிமலை மற்றும் மலிகாப்புரம் கோவில்களில் தலைமை பூசாரிக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது. அப்போது, மலையாள பிராமணர்கள் மட்டுமே தலைமை பூசாரியான மேல்சாந்தி பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் எனத் தெரிவித்திருந்தது.

இதனை எதிர்த்து பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவில் திருவாங்கூர் தேவசம் போர்டு அறித்தது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ரிட் மனு விசாரணை முடிவில் ஏற்கனவே அளித்த தீர்ப்பை உறுதி செய்தது.

தனது தீர்ப்பில், "கோவிலுக்குள் நுழையும் உரிமை என்பது, பூஜை செய்வதற்கான உரிமை அல்ல. கோவில் விவகாரங்களில் பாரம்பரிய நடைமுறைகளை தேவசம் போர்டு கடைபிடிக்க வேண்டும். அது ஒன்றும் தீண்டாமை அல்ல. மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் 17-வது பிரிவை மீறுவது ஆகாது" எனக் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News