இந்தியா

சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த கேரள ஐகோர்ட்

Published On 2025-06-18 21:12 IST   |   Update On 2025-06-18 21:12:00 IST
  • சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்.
  • அரசு விழாக்களில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது.

திருவனந்தபுரம்:

கேரள மலையோர பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு அம்மாநில ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட், அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினம் முதல் இந்தத் தடை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

கேரள மலையோர பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது.

தண்ணீர் குடிப்பதற்கு ஸ்டீல், காப்பர் டம்ளர்களைப் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும்.

தேக்கடி, வாகமண், அதிரப்பள்ளி, சாலக்குடி, நெல்லியம்பதி, பூக்கோடு ஏரி-வைத்திரி, வயநாட்டில் உள்ள கர்லாட் ஏரி, அம்பலவயல், வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம் ஆகிய சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்.

சுற்றுலா தலங்கள் தவிர கேரளா முழுவதும் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்களிலும், அனைத்து அதிகாரப்பூர்வ மத்திய மற்றும் மாநில அரசு விழாக்களிலும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News