இந்தியா

பிரதமர் மோடி, முதல் மந்திரி பினராயி விஜயன்

பிரதமர் மோடியுடன் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் சந்திப்பு

Published On 2022-12-27 16:18 IST   |   Update On 2022-12-27 16:18:00 IST
  • பிரதமர் மோடியை கேரள முதல் மந்திரி இன்று சந்தித்துப் பேசினார்.
  • டெல்லியில் பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கேரளாவில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவித்திருப்பதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரையிலான அதிவேக ரயில் பாதை திட்டத்திற்கு இன்னும் மத்திய அரசு அனுமதி வழங்காதது குறித்தும் பிரதமரிடம் அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது

Tags:    

Similar News