இந்தியா

சம்பள உயர்வு கேட்டு வருகிற 5-ந்தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Published On 2025-07-17 09:26 IST   |   Update On 2025-07-17 09:26:00 IST
  • அரசு பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது.
  • அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் 4 அரசு பஸ் போக்குவரத்து கழகங்கள் உள்ளன. அதாவது பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் , கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் உள்பட 4 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 1½ லட்சம் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அரசு பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதையடுத்து, சம்பள உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு, போக்குவரத்து கழக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.

இதுபற்றி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 5-ந் தேதி காலை 6 மணியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News