இந்தியா

கொரோனா அச்சுறுத்தல் - புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதித்த கர்நாடக அரசு

Published On 2022-12-26 16:48 GMT   |   Update On 2022-12-26 16:48 GMT
  • திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
  • புத்தாண்டு கொண்டாட்டங்கள் நள்ளிரவு 1 மணிக்குள் முடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டம் காணவைத்தது. தற்போது இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், சீனாவில் புதிதாக மீண்டும் பரவும் கொரோனா (பி.எப்.7) கதிகலங்க வைத்துள்ளது.

இந்த தொற்று இந்தியாவிலும் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநில அரசு கொரோனா பரவலைத் தடுக்க புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

உணவகங்கள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணிக்குள் நிறைவடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News