VIDEO: சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்
- கர்நாடக சட்டப்பேரவையில் இன்று உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.
- சட்டப்பேரவை வளாகத்துக்கு கர்நாடக துணை முதலமைச்சர் சைக்கிளில் வந்தார்.
உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவை வளாகத்துக்கு கர்நாடக துணை முதலமைச்சர் சைக்கிளில் வந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று காலை உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட இந்த நடைப்பயணத்தை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த நடைப்பயணத்தை முடித்துவிட்டு, சட்டப்பேரவை வளாகத்துக்கு டி.கே.சிவக்குமார் சைக்கிளில் வந்தார். அப்போது சைக்கிளை நிறுத்தும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக அவரது அருகில் இருந்த பாதுகாப்புப் படையினர் டி.கே.சிவக்குமாரை பிடித்ததால், அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.