இந்தியா

கர்நாடகா சட்டசபை தேர்தல்- மதியம் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2023-05-10 14:40 IST   |   Update On 2023-05-10 14:40:00 IST
  • காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான.
  • காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவான. தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் மதியம் 1 மணி நிவலரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 47.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

குறைந்தபட்சமாக பெங்களூரு மத்திய மாவட்டத்தில் 29.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News