இந்தியா

சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

Published On 2025-09-03 13:05 IST   |   Update On 2025-09-03 13:05:00 IST
  • பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
  • தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தார்.

பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவுக்கும், அவரது மகள் கவிதாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்தது. சகோதரர் ராமா ராவுடனும் மோதல் வெடித்தது.

இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து பேசினார் கவிதா. மேலும், கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனால், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்துள்ளார்.

மேலும், உறவினர்களான ஹரிஷ் மற்றும் சந்தோஷ் ராவ் ஆகியோர் நமது குடும்பத்தை அழிக்க திட்டமிட்டுள்ளனர் என்று தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தனது தந்தை மற்றும் சகோதரரை தோற்கடிக்க ஹரிஷ் ராவ் பிரச்சாரத்திற்கு நிதியளித்ததாகவும் கவிதா குற்றம் சாட்டினார்.

Tags:    

Similar News