இந்தியா

தேச பாதுகாப்பு கருதி.. துருக்கி பல்கலை.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முறித்த JNU பல்கலைக்கழகம்

Published On 2025-05-14 23:10 IST   |   Update On 2025-05-14 23:39:00 IST
  • பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
  • இந்தியாவின் தேசிய நலன்களுக்கு மாறாக, துருக்கி பாகிஸ்தானை ஆதரிக்கிறது.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகத் துருக்கியில் உள்ள இனோனு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தங்களை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறித்துக் கொண்டுள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியதால் அந்நாட்டின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த சூழலில் அந்நாட்டு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது பற்றிய தகவல் JNUவின் X கணக்கில் அறிவிக்கப்பட்டது.

இரு பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கல்வி ஒத்துழைப்பை குறிக்கோளாக கொண்டு பிப்ரவரி 3, 2025 அன்று கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 2, 2028 அன்று காலாவதியாக இருந்தது.

ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள JNU பல்கலை., பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் எந்த சிரமங்களையும் சந்திக்காமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இந்தியாவின் தேசிய நலன்களுக்கு மாறாக, துருக்கி பாகிஸ்தானை ஆதரிப்பதால் 'துருக்கி புறக்கணிப்பு' என்ற பதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Tags:    

Similar News