இந்தியா
VIDEO: இடுக்கி மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சிக்கிய ஜீப்
- கேரளாவில் பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.
பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையினால் கல்லட்டுபாராவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் ஆற்றில் சிக்கி கொண்டது.
ஆற்று வெள்ளத்தில் சிக்கிய ஜீப்பில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கயிறு கட்டி அவர்களை பத்திரமாக மீட்டனர்.