மெட்ரோ ரெயிலில் மது அருந்தும் நபர் - வைரலாக பரவும் வீடியோ உண்மையா?
- வாலிபர் தான் கொண்டு வந்த முட்டையை உரித்து சாப்பிட்டார்.
- பையில் கிளாஸ் மற்றும் குப்பைகளை எடுத்து வைத்து விட்டு பயணத்தை தொடரும் காட்சிகள் வெளியாகின.
டெல்லி மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்தை வழங்குவதில் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சேவை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
அவ்வப்போது டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும் நபர்களில் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யும்போது இளைஞர் ஒருவர் 'மது அருந்துவது' போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில் கண்ணாடி கிளாசில் மது அருந்திய அந்த வாலிபர், தான் கொண்டு வந்த முட்டையையும் உரித்து சாப்பிட்டார். இதையடுத்து தன்னுடைய பையில் கிளாஸ் மற்றும் குப்பைகளை எடுத்து வைத்து விட்டு பயணத்தை தொடரும் காட்சிகள் வெளியாகின.
இளைஞரின் இந்த செயலுக்கு சமூக வலைதளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக அந்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பதிவில், அந்த பானம் மது அல்ல "Appy Fizz" என்றும் தெளிவுபடுத்தினார்.