இந்தியா
நடுவானில் எஞ்சின் கோளாறு.. இண்டிகோ விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம்
- சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
- பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
டெல்லியில் இருந்து கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-6271, இன்று (புதன்கிழமை) இரவு மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் ஒரு எஞ்சினில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் இரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம், நடுவானில் எஞ்சின் கோளாறை சந்தித்தது. இதையடுத்து, மும்பைக்கு திருப்பி விடப்பட்டு, இரவு 9.52 மணியளவில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தின் பாதுகாப்பான தரையிறக்கத்திற்குப் பிறகு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.