இந்தியா
வங்கதேசத்தில் இருந்து சணல் பொருட்கள் இறக்குமதிக்கு இந்திய அரசு புதிய கட்டுப்பாடு
- வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள் உட்பட பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
- துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம்.
இந்தியா - வங்கதேச நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்திலிருந்து சாலை, ரெயில் வழியாக சணல் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இருப்பினும், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி, நவா ஷேவா துறைமுகம் வழியாக வங்கதேசத்தில் இருந்து சணல் பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 17 அன்று, அண்டை வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்ற சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடுகள் விதித்தது குறிப்பிடத்தக்கது.