இந்தியா

அரசியல் சாசனமே இந்திய நாட்டின் ஒளிவிளக்கு- பிரதமர் மோடி

Published On 2025-08-15 08:01 IST   |   Update On 2025-08-15 08:01:00 IST
  • 140 கோடி மக்களின் மனசாட்சியாக இந்திய ராணுவம் செயல்படுகிறது.
  • தாய் மண்ணின் பெருமையை காக்க இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என எழுதப்பட்ட கொடியுடன் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடிக்கு பூக்கள் தூவப்பட்டன.

செங்கோட்டையில் 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* 140 கோடி மக்களின் மனசாட்சியாக இந்திய ராணுவம் செயல்படுகிறது.

* 140 கோடி மக்களும் கொண்டாடும் நாளாக இந்த நன்னாள் அமைந்துள்ளது.

* லட்சக்கணக்கான வீரர்களின் தியாகத்தால் நம் தேசம் விடுதலை பெற்றது.

* இந்திய விடுதலை போராட்டத்தின் பெண்களின் பங்கு இன்றியமையாதது.

* இந்திய மக்கள் அனைவரும் பெருமையுடன் கொண்டாடும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.

* தாய் மண்ணின் பெருமையை காக்க இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

* அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு வணக்கத்தை செலுத்துகிறேன்.

* அரசியல் சாசனமே இந்திய நாட்டின் ஒளிவிளக்கு.

* அரசியலமைப்பு சட்டம் தான் தேசத்திற்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News