இந்தியா

கடந்த 11 வருடங்களாக கங்கையை தூய்மைப்படுத்துவது தேர்தல் வெற்று வாக்குறுதியாகியுள்ளது: காங்கிரஸ்

Published On 2025-06-20 18:19 IST   |   Update On 2025-06-20 18:19:00 IST
  • திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்படும். தொடக்க விழா நடத்தப்படும். மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படும்.
  • ஆனால், கண்ணால் பார்க்கக்கூடிய அல்லது தீர்க்கமான முடிவுகளை பார்க்க முடியவில்லை.

மத்திய அரசும், பீகார் மாநில அரசும் கங்கை நதி சுத்தப்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கடந்த 11 வருடங்களாக வெற்றி வாக்குறுதியாகியுள்ளது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கங்கை தூய்மை என்ற பெயரில் பெரும்பாலான திட்டங்கள் தொடங்கப்பட்டது ஊழலுக்கான ஓட்டை என்பது நிரூபணமாகியுள்ளது. திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்படும். தொடக்க விழா நடத்தப்படும். மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படும். ஆனால், கண்ணால் பார்க்கக்கூடிய அல்லது தீர்க்கமான முடிவுகளை பார்க்க முடியவில்லை.

விளம்பரங்களை விரும்பும் பிரதமர் மீண்டும் ஒருமுறை பீகாருக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார். இலவச விளம்பரத்திற்காக எத்தனை முறை பிரதமர் மோடி ரிப்பன் வெட்டியுள்ளார் என்பது விசயம் இல்லை.

எத்தனை போலி அறிவிப்புகளை அறிவிக்கிறார் என்பது விசயம் இல்லை. சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இரட்டை என்ஜின் அரசு தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News