இந்தியா

18-ந்தேதி வரை வட மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Published On 2025-04-13 12:29 IST   |   Update On 2025-04-13 12:29:00 IST
  • 15-ந்தேதி முதல் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் குஜராத்திலும் புதிய வெப்ப அலை வீசத் தொடங்கும்.
  • மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் வெப்ப அலையும் வீசுகிறது.

நேற்று அதிகபட்சமாக குஜராத்தில் 107 டிகிரி வெயில் அடித்தது. இந்த நிலையில் டெல்லி மற்றும் வடமாநிலங்களில் வருகிற 18-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் கூறியதாவது:-

15-ந்தேதி முதல் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் குஜராத்திலும் புதிய வெப்ப அலை வீசத் தொடங்கும். நாளை மற்றும் நாளை மறுநாளில் மேற்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

16-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை சில கடுமையான வெப்ப அலைக்கு வாய்ப்பு உள்ளது. குஜராத், பஞ்சாப், அரியானா, டெல்லி, கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலை ஏற்படக் கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News