இந்தியா

துன்புறுத்தும் ஐ.ஏ.எஸ். கணவன்.. விவாகரத்து கேட்டு மிரட்டுவதாக ஐ.ஏ.எஸ் மனைவி போலீசில் புகார்

Published On 2025-11-12 05:18 IST   |   Update On 2025-11-12 05:18:00 IST
  • ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார்.
  • கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

2014 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஷிஷ் மற்றும் பாரதி தீட்சித் இருவரும் அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது ராஜஸ்தான் அரசின் நிதித்துறையில் இணை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பாரதி தீட்சித் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் ஆஷிஷ் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திருமணம் செய்து கொண்டதிலிருந்து தான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தனது கணவர் ஆஷிஷ் துன்புறுத்துவதாக பாரதி தீட்சித் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சமீப காலமாக துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்றும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார். பல குற்றவாளிகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம், ஆஷிஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கடத்திச் சென்று பல மணி நேரம் சிறைபிடித்து வைத்திருந்ததாகவும், விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

புகாரை ஏற்று ஜெய்ப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

Similar News