இந்தியா

"நான் இந்தியாவின் மருமகள்.. என்னை போக சொல்லாதீங்க" காதலனுக்காக எல்லை தாண்டிய பாகிஸ்தான் பெண் கோரிக்கை

Published On 2025-04-26 15:19 IST   |   Update On 2025-04-26 15:19:00 IST
  • கராச்சியில் இருந்து தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியா வந்தார்.
  • சீமா ஹைதர் - சச்சின் மீனா ஜோடிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் பாகிஸ்தான் விசா சேவைகளையும் ரத்து செய்தது. விசிட்டிங் விசாவில் வந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்குள் திரும்பவும், சிகிச்சைக்காக வந்தவர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் திரும்வும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பாஸ்கிதானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் 2023 ஆம் ஆண்டு ஆன்லைன் கேமில் சந்தித்த தனது காதலனுடன் வாழ பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தார்.

சிந்து மாகாணம், கராச்சியில் இருந்து தனது நான்கு குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியா வந்த சீமா ஹைதர் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் தனது காதலன் சச்சின் மீனாவுடன் வசித்து வருகிறார். பல்வேறு விசாரணைகளுக்குப் பின் அவர் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்பட்டார். சீமா ஹைதர் - சச்சின் மீனா ஜோடிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தன்னை நாடு கடத்த வேண்டாம் என்று சீமா ஹைதர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன். இப்போது நான் இந்தியாவின் மருமகள்.

நான் பாகிஸ்தானுக்குத் திரும்ப விரும்பவில்லை. எனவே, தயவுசெய்து என்னை இந்தியாவில் தங்க அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சீமா சச்சினை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார் என்றும் எனவே அவர் கணவருடன் இந்தியாவில் இருக்க உரிமை உள்ளது என்று அவர்களின் வக்கீல் தெரிவித்தார். 

Tags:    

Similar News