இந்தியா

மகாராஷ்டிராவில் 1ஆம் வகுப்பில் இருந்து இந்தி: துணை முதல்வர் அஜித் பவார் எதிர்ப்பு..!

Published On 2025-06-25 16:38 IST   |   Update On 2025-06-25 16:38:00 IST
  • 1 முதல் 4ஆம் வகுப்பு வரை இந்தி கற்றுப்பிக்கக் கூடாது.
  • 5ஆம் வகுப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும்.

இருமொழி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை திட்டத்தை ஏற்க மறுத்து வருகின்றன. இதன்மூலம் மறைமுகமாக இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, மத்திய அரசு மீது குற்றம்சாட்டி வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்நாவிஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பட்நாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு, மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளது.

மராத்தி மற்றும் ஆங்கில வழிக்கல்வி பள்ளிக் கூடங்களில் 1ஆம் வகுப்பு முதல் இந்தி கற்றுக்கொடுக்கப்படும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

1ஆம் வகுப்பில் இருந்து இந்தி கற்றுக்கொள்ளப்படும் என மும்மொழிக் கொள்கை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் எதிர்ப்ப தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஜித் பவார் கூறியதாவது:-

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முதலமைச்சர் ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருந்தார். 1 முதல் 4ஆம் வகுப்பு வரை இந்தி கற்றுப்பிக்கக் கூடாது. 5ஆம் வகுப்பில் இருந்துதான் தொடங்க வேண்டும். மாணவர்கள் 1ஆம் வகுப்பில் இருந்து மராத்தி கற்க வேண்டும். சரளமாக படிக்கும், எழுதும் திறனை பெற வேண்டும்.

இவ்வாறு அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News