இந்தியா
டெல்லி, உ.பி.யில் கனமழை: காவல் நிலையம் இடிந்து விழுந்து எஸ்.ஐ உயிரிழப்பு
- பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
- அதிகாலை 5.30 மணி வரை டெல்லியில் 81.2 மி.மீ. கனமழை பெய்துள்ளது.
டெல்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக உத்தரப் பிரதேசத்தில் காசியாபாத்தில் ஒரு காவல் நிலையம் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளுக்குள் சிக்கி எஸ்.ஐ. இறந்தார். வீரேந்திர மிஸ்ரா (58) ஏசிபி அங்கூர் விஹார் அலுவலகத்தில் எஸ்ஐ . ஆகப் பணிபுரிந்து வந்தார்.
மழை காரணமாக நிலையத்தில் சிக்கித் தவித்த மிஸ்ரா, கூரை இடிந்து விழுந்து உள்ளே சிக்கினார். இடிபாடுகளில் சிக்கியபோது ஏற்பட்ட பலத்த காயங்களால் மிஸ்ரா இறந்ததாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, சனிக்கிழமை இரவு 11 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை டெல்லியில் 81.2 மி.மீ. கனமழை பெய்துள்ளது.