இந்தியா

அசாம் கனமழை: 20 மாவட்டங்களில் 4 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு

Published On 2025-06-03 01:11 IST   |   Update On 2025-06-03 01:11:00 IST
  • 3,524.38 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன
  • 696 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் மழை வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. குஷியாரா நதி மற்றும் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 20 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

54 வருவாய் வட்டங்களில் உள்ள 758 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மாநில அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 56 வருவாய் வட்டங்களிலும், 20 மாவட்டங்களில் 764 கிராமங்களிலும் 3,64,046 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார் மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

3,524.38 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன,696 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.52 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவற்றில் 10,272 பேர் தங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உணவு விநியோகிக்கப்படுகிறது. மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் நதிகளின் கரையோரங்களில் வசிப்பவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News