இந்தியா

Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு

Published On 2025-06-12 14:54 IST   |   Update On 2025-06-13 20:01:00 IST
2025-06-12 14:54 GMT

கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில், கணவனை சந்திக்க லண்டன் சென்ற புதுப்பெண் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

2025-06-12 14:53 GMT

பூமி சவுகான் என்ற பெண், கடும் போக்குவரத்து காரணமாக ௧௦ நிமிடம் காலதாமதமாக விமான நிலையம் வந்தடைந்ததால், விமானத்தை தவறவிட்டேன். இதனால் விபத்தில் இருந்து தப்பினேன். விபத்து குறித்த செய்தி அறிந்து உடல் நடுங்கியது. இன்னும் அந்த நடுக்கம் நிற்கவில்லை என உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

2025-06-12 14:51 GMT

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா பார்வையிட்ட காட்சி.

2025-06-12 13:04 GMT

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் பிரதமர் ஸ்டார்மர் ஆகியோர் அகமதாபாத் விமான விபத்து வேதனையளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News