Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு
விபத்துக்குள்ளான விமானத்தின கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் விமான விபத்துக்கு ரஷிய அதிபர் புதின் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினற்கு அது அனுதாபம் மற்றும் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வரும் பயணிகளை சந்தித்து ஆறுதல் கூற சென்ற குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல்
அகமதாபாத் விமான விபத்து செய்தி அறிந்து இதயம் உடைந்து விட்டது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிகமாக மூடப்பட்ட அகமதாபாத் விமான நிலையம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.
மெகானிநகரில் விமான விழுந்து தீப்பிடித்து எரிந்ததால் குடியிருப்புவாசிகள் உயிர் பிழைக்க தப்பி ஓடிய காட்சி.
"ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் குடும்பத்தினருடன் என் இதயம் உள்ளது. இந்த பயங்கரமான விபத்தில் உங்கள் அன்புக்குரியவர்கள் உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கையை முழு நாடும் எதிர்நோக்குகிறது. கடவுள் உங்கள் அனைவருடனும் இருக்கட்டும்" என்று காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி தெரிவித்தள்ளார்.