இந்தியா

Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு

Published On 2025-06-12 14:54 IST   |   Update On 2025-06-13 20:01:00 IST
2025-06-12 10:39 GMT

அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்துச் செய்தியால் மிகுந்த வேதனையடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் குடும்பத்தினருடன் உள்ளன மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

2025-06-12 10:38 GMT

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக குஜராத் மாநில அரசு மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி எண்.079-232-51900 மற்றும் மொபைல் எண்.9978405304 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

2025-06-12 10:36 GMT

அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் எண்ணங்கள் பயணிகள், பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் ஏர் இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம் என இண்டிகோ தெரிவித்துள்ளது.

2025-06-12 10:33 GMT

அகமதாபாத்- லண்டன் காட்விக் விமான விபத்தைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

2025-06-12 10:05 GMT

குஜராத் விரைந்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

2025-06-12 10:01 GMT

அகமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

2025-06-12 09:58 GMT

சிதறிக்கிடக்கும் விமானப் பாகங்கள்

Tags:    

Similar News