Ahmedabad Air Plane Crash- Live Update..! அகமதாபாத் விமான விபத்து... மீட்பு பணிகள் நிறைவு - கருப்புப்பெட்டி மீட்பு
பூமி சவுகான் என்ற பெண் வழியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றதால் உயிர் தப்பினார்.
ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகமதாபாத் விமான விபத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
அகமதாபாத் விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான ஒன்று, மேலும் இந்தியாவுக்கு எந்தத் திறனிலும் உதவ அமெரிக்கா தயாராக உள்ளது என தெரிவித்தார்.
அகமதாபாத் விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரங்கல் தெரிவித்தார்.
ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், விமான விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு நாடு துணையாக நிற்கும். விபத்து குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து ஆறுதல் கூறினார்.