அரசின் வேலை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடிப்பது: விழா கொண்டாட்டத்தில் தலையிடுவது அல்ல- ஆதித்யா தாக்கரே
- கால்நடை மார்கெட்டுகளை ஜூன் 3ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி வரை மூட வேண்டும் என கடிதம்.
- பசுவதைக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து சட்டம் அமலில் உள்ளது.
ஜூன் 7ஆம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விளைபொருள் சந்தை குழுக்களிடம், கால்நடை மார்கெட்டுகளை ஜூன் 3ஆம் தேதியில் இருந்து 8ஆம் தேதி வரை மூட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பசுவதைக்கு எதிராக கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து சட்டம் அமலில் உள்ளது. கொலை செய்தல், அவற்றை கொண்டு செல்லுதல், விற்பனை மற்றும் கொள்முதல் செய்தல், சேமித்து வைப்பது சட்ட விரோதமாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் சிவசேனா (UBT) தலைவர் ஆதித்யா தாக்கரே, அரசின் வேலை பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பது. விழா கொண்டாட்டத்தில் தலையிடுவது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "இதை சேமிக்க அல்லது அதை சேமிக்க ஏன் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் பண்டிகையை கொண்டாடுறீங்க. நான் ஏற்கனவே சுற்றுச்சூழல் ஆர்வலர். தண்ணீர் அல்லது பசுமையை சேமிக்க எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். இது அரசு வேலையை கிடையாது. தற்கொலை செய்து கொண்டிருக்கும் விவசாயிகளை காப்பாற்றுவதுதான் அரசுடைய வேலை.
தண்ணீர் வீட்டிற்குள் புகுந்தால், அதன்பின் ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என விசாரிக்க வேண்டும். பஹல்காம் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டுபிடிப்பதுதான் அரசாங்கத்தின் வேலை. விழா கொண்டாட்டத்தில் தலையிடுவது அல்ல.
இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.