இந்தியா

சுதந்திரத்துக்கு பின் முதல் முறையாக.. உ.பி. கிராமத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன்!

Published On 2025-05-06 16:14 IST   |   Update On 2025-05-06 16:21:00 IST
  • திருமண சீசனில், இரவில் தலையில் விளக்கை சுமந்து செல்வேன்
  • வாழ்நாளில் முதல் முறையாக காலணி அணிந்துகொண்டார் ராம்சேவக்.

உத்தரப் பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ளது நிசாம்பூர் கிராமம். இங்கே சுமார் 40 வீடுகள் உள்ளன. 300 பேர் வசிக்கின்றனர். அனைவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

சில நாட்களுக்கு முன்பு வரை, இந்த கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவர் கூட இல்லை. ஆனால் 15 வயது ராம்சேவக் அந்த குறையை தீர்த்து வைத்துள்ளார். அவர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தந்தை ஜெகதீஷ் ஒரு கூலித்தொழிலாளி, தாய் புஷ்பா கிராமத்துப் பள்ளியில் சமையல்காரர்.

ராம்சேவக்கிற்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கான இந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை. அவர் குடும்பத்தின் மூத்த மகன். எனவே, குடும்பத்தை நடத்தும் பொறுப்பும் அவர் தோள்களில் விழுந்தது. சொந்த படிப்புச் செலவை ஏற்கும் பொறுப்பும் அவரிடமே.

இதுகுறித்து ராம்சேவக் கூறுகையில், "திருமண சீசனில், இரவில் தலையில் விளக்கை சுமந்து செல்வேன். அதற்குப் கூலியாக எனக்கு 200-300 ரூபாய் கிடைத்திருக்கும்.

திருமணங்கள் எதுவும் நடக்காதபோது, நான் தந்தையுடன் கூலி வேலை செய்து வந்தேன். இதிலிருந்து கிடைக்கும் பணத்தில் கட்டணம் செலுத்துவேன்" என்கிறார். மேலும் "உயர்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற முடியாது என்று மக்கள் தன்னை கேலி செய்வார்கள், ஆனால் ஒரு நாள் எல்லோரும் சொல்வது தவறு என்று நிரூபிப்பேன் என்று அவர்களிடம் கூறுவேன்" என்றார்.

கிராமத்தில் முதன்முறையாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு, ராம்சேவக்கை சந்திக்க பாராபங்கி மாவட்ட மாஜிஸ்திரெட் சஷாங்க் திரிபாதி அழைத்தார்.

ஆனால் ராம்சேவக் இடம் சரியான உடைகள் இல்லை. காலணிகள் இல்லை. சில ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ராம்சேவக்கிற்கு உடைகள் மற்றும் காலணிகளை பரிசளித்தனர்.

வாழ்நாளில் முதல் முறையாக காலணி அணிந்துகொண்டார் ராம்சேவக். மேலும் மாவட்ட மாஜிஸ்திரெட் ஷஷாங்க் திரிபாதி ராம்சேவக்கை கவுரவித்தார். மேலும் அவரது மேல் படிப்புகளுக்கான கட்டணங்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் ராம்சேவக் மற்றும் அவரது பெற்றோரை மாவட்ட ஆட்சியரும் நேரில் அழைத்து பாராட்டினார்.

Tags:    

Similar News