இந்தியா

மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிப்பு: நாளை முதல் பேரணி தொடரும் என விவசாயிகள் அறிவிப்பு

Published On 2024-02-20 00:59 GMT   |   Update On 2024-02-20 00:59 GMT
  • நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு சில கருத்துகளை பரிந்துரை செய்தது.
  • விவசாயிகள் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை நிராகரித்துள்ளது.

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டனர். இதற்காக அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து விவசாயிகள் புறப்பட்டனர்.

அவர்களை எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே விவசாயிகள்- மத்திய அரசு இடையிலான 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது சோளம், சில பருப்பு வகைகள், காட்டன் போன்றவைகளுக்கு பழைய குறைந்தபட்ச ஆதார விலை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும். அரசு ஏஜென்சிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்யும். கொள்முதல் செய்வதற்கு அளவு நிர்ணயம் கிடையாது என மத்திய அரசு பரிந்துரை செய்தது.

 இது தொடர்பான ஆலோசனை நடத்தி முடிவை சொல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர். நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு நாட்கள் காலஅவகாசம் கேட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் பரிந்துரைகள் நிராகரிக்கப்படுகிறது. பேரணி தொடரும் என விவசாயிகள் அறித்துள்ளனர்.

இதனால் டெல்லி நோக்கி செல்ல விவசாயிகள் முயற்சி மேற்கொள்வார்கள். அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

Tags:    

Similar News