இந்தியா

"டெல்லி சலோ" பேரணியை தொடங்கினர் விவசாயிகள்

Published On 2024-02-13 05:15 GMT   |   Update On 2024-02-13 05:42 GMT
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி.
  • நேற்று அரசுடன் நடைபெற்ற 6 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் டெல்லியில் இன்று பேரணி நடத்த இருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன.

அதனால் டெல்லியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப், அரியானா மாநில எல்லையில் இருந்து டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழையாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் அறிவித்தபடி பேரணி தொடங்கும் என விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்தன. அதனடிப்படையில் விவசாயிகள் ஷம்பு (பஞ்சாப்-அரியானா) எல்லையில் பேரணியை தொடங்கியுள்ளனர்.

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் ஃபட்டோகார்ஹ் சாஹிப் என்ற இடத்தில் இருந்து அம்ாபலா அருகில் உள்ள ஷம்பு எல்லையை நோக்கி புறப்பட்டனர்.

திக்ரி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஷம்பு எல்லையில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News