இந்தியா
null

வருமான வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

Published On 2025-09-26 13:23 IST   |   Update On 2025-09-26 13:27:00 IST
  • ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் அமைப்புகள் வலியுறுத்தி இருந்தன.

2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி தணிக்கை அறிக்கைகளை (TARs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 ஆக இருந்த காலக்கெடுவை அக்டோபர் 31, 2025 வரை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பல்வேறு வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றை காரணம் காட்டி அவகாசத்தை நீட்டிக்க பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் அமைப்புகள் வலியுறுத்தி இருந்தன.

மேலும் தணிக்கை அறிக்கை தாக்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க ராஜஸ்தான், கர்நாடக உயர் நீதிமன்றங்களும் உத்தரவிட்டிருந்தன. இதையடுத்து கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News