இந்தியா

அகழ்வாராய்ச்சி: புத்தர் கோவிலில் குவிந்து கிடந்த பழங்கால நாணயங்கள்

Published On 2024-04-05 05:39 GMT   |   Update On 2024-04-05 05:47 GMT
  • ஆய்வின்போது கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருந்த பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
  • பழங்கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் உலக வரைபடத்தில் பனிகிரி இடம் பிடித்துள்ளது.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் , சூரியா பேட்டை மாவட்டம், பனிகிரியில் புத்தர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆய்வின்போது கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருந்த பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் பானையை வெளியே எடுத்தனர். அதில் பழங்காலத்தை சேர்ந்த ஏராளமான ஈய நாணயங்கள் குவிந்து கிடந்தன.

மொத்தம் 3,730 பழங்கால நாணயங்கள் இருந்தன. பானை இருந்த இடத்தின் அருகில் கண்ணாடி மாதிரிகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளின் மாதிரிகள் இருந்தன.

ஒரே நேரத்தில் இவ்வளவு பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது நாட்டில் இதுவே முதல் முறை என அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பழங்கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் உலக வரைபடத்தில் பனிகிரி இடம் பிடித்துள்ளது.

பவுத்த வரலாற்றை இந்த நாணயங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கவனம் பனிகிரி புத்த கோவில் மீது விழுந்துள்ளது.

Tags:    

Similar News