search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ancient Coins"

    • ஆய்வின்போது கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருந்த பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
    • பழங்கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் உலக வரைபடத்தில் பனிகிரி இடம் பிடித்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் , சூரியா பேட்டை மாவட்டம், பனிகிரியில் புத்தர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆய்வின்போது கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்டு இருந்த பானை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

    அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் பானையை வெளியே எடுத்தனர். அதில் பழங்காலத்தை சேர்ந்த ஏராளமான ஈய நாணயங்கள் குவிந்து கிடந்தன.

    மொத்தம் 3,730 பழங்கால நாணயங்கள் இருந்தன. பானை இருந்த இடத்தின் அருகில் கண்ணாடி மாதிரிகள் மற்றும் பெண்கள் அணியும் நகைகளின் மாதிரிகள் இருந்தன.

    ஒரே நேரத்தில் இவ்வளவு பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது நாட்டில் இதுவே முதல் முறை என அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

    பழங்கால நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் உலக வரைபடத்தில் பனிகிரி இடம் பிடித்துள்ளது.

    பவுத்த வரலாற்றை இந்த நாணயங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் கவனம் பனிகிரி புத்த கோவில் மீது விழுந்துள்ளது.

    • பள்ளி பருவ காலங்களில் நாணயங்கள் சேகரிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர்.
    • இந்தியபழங்கால நாணயங்கள், அரிய வகை ரூபாய் நோட்டுகளை சேகரித்து வருகிறார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கடைவீதியில் டீ கடை நடத்தி வருபவர் வசுமித்ரன் (வயது 42).

    இவர், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.

    இவர் சொந்தமாக டீ மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் சேகரித்து வைத்துள்ளார்.

    பள்ளி பருவ காலங்களில் நாணயங்கள் சேகரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பழைய ரூபாய் நோட்டுகள் கரன்சி மற்றும் நாணயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் இந்தியபழங்கால நாணயங்கள், அரிய வகை ரூபாய் நோட்டுகளை சேகரித்து வருகிறார்.

    இதுவரை ஒரு பைசா, பத்து பைசா, 25 பைசா, மன்னர்கள் காலத்து நாணயங்கள் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட நாணயங்கள் வரை சேகரித்து கடையில் வைத்துள்ளார்.

    கடைக்கு வரும் வாடிக்கை யாளர்கள் இதுகுறித்து விசாரிப்பார்கள்.

    அவற்றைச் சேகரிப்பது குறித்து அவர்களுக்கு நான் ஆர்வமுடன் விளக்குவேன்.

    இது மகிழ்ச்சியை எனக்கு அளிப்பதாக உள்ளது.

    மேலும் போதிய வருமானம் இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பழங்கால நாணயங்கள் குறித்து காட்சிப்படுத்த என்னால் முடியவில்லை.

    அரசு உதவி செய்தால் இதை பள்ளி கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு காட்சிப்படுத்துவேன் என கூறியுள்ளார்.

    ×