இந்தியா

மேற்கு வங்கம்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்

Published On 2025-05-15 16:14 IST   |   Update On 2025-05-15 16:14:00 IST
  • 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்திய இணையமைச்சர் ஆனார்.
  • 2024 தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்து வந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 2019 தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானவர் ஜான் பார்லா. இவர் சிறுபான்மை விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்தவர். பாஜக தலைவர் இவர் தற்போது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கடசியில் இணைந்தது குறித்து ஜான் பார்லா கூறியதாவது:-

நான் பாஜகவில் இருந்தபோது பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக என்னை பணியாற்ற அனுமதிக்கவில்லை. மம்தா பானர்ஜியின் தலைமையின் கீழ், பழங்குடியின மக்களுக்கான நியாயத்தை என்னால் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஜான் பார்லா தெரிவித்தார்.

2019 பாராளுமன்ற தேர்தலில் ஜான் பார்லா அலிப்பூர்துவார்ஸ் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2024ஆம் ஆண்டு இவருக்கு வாய்ப்பு வழங்கப்படுவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்தார். அவருக்குப் பதிலாக மேற்கு வங்க சட்டமன்ற பாஜக தலைமை கொறடாவாக இருநது மனோஜ் திக்கா நிறுத்தப்பட்டார். இவர் வெற்றி பெற்று எம்.பி.யானார்.

இதனால் பாஜக மேலிடம் மீது அதிருப்தி ஏற்பட்டு கட்சியில் இருந்து விலகியிருந்தார். தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

Tags:    

Similar News