இந்தியா
null

முதுநிலை மருத்துவப் படிப்பில் ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்தும் EWS மாணவர்கள்

Published On 2025-11-25 15:24 IST   |   Update On 2025-11-25 15:27:00 IST
  • 140 மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளில் NRI ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது
  • இந்த தகவல் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் நம்பகத் தன்மையை இது கேள்வி எழுப்புகிறது

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு அறிவித்தது.

இதையடுத்து நீட் தேர்வு எழுதினாலே மருத்துவ மேற்படிப்பில் சேரமுடியும் என்ற நிலை உருவானது.

இந்நிலையில், EWS (ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம்) பிரிவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்த 140 மாணவர்கள், ஆண்டுக்கு ரூ.25 லட்சம் - ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த 140 மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளில் NRI ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் - ரூ.1 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த தகவல் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் நம்பகத் தன்மையை இது கேள்வி எழுப்புகிறது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும், ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவான வருவாய் கொண்ட உயர்சாதி ஏழைகளே, EWS பிரிவில் வருவார்கள் என மத்திய அரசின் சட்டம் கூறும் அவர்களால் எப்படி வருடத்திற்கு 1 கோடி கட்டணம் செலுத்தமுடியும் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags:    

Similar News